SSC Free Coaching Class எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் : தமிழக அரசு

போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இனி இலவசமா கோச்சிங் கிளாஸ்ல சேரலாம்.. முழு விபரம் இதோ உங்களுக்காக.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவற்றில் மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) Combined Graduate Level தேர்விற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் Combined Graduate Level தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 21.09.2022 அன்று தொடங்கப்படவுள்ளது.

இத்தேர்விற்கான கல்வி தகுதியாக “ஏதாவது ஒரு பட்டப்படிப்பு (Any Degree) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான பாடத்திட்டத்தின் படி 1. General Intelligence & Reasoning, 2. General Awareness, 3 Numerical Aptitude, 4. English Comprehension ஆகியவற்றிற்கான வகுப்புகளும், வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸப் (Whatsapp) எண்ணிற்கு தங்களது பெயர், கல்வித்தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி தங்களின் பெயரினை பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்கள் அறிய மற்றும் இப்பயிற்சி வகுப்பிற்கு தங்களை பதிவு செய்து கொள்ள 9597557913 என்ற Whatsapp எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *