No Exam ரூ.18,000 டூ ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்.. சென்னை என்ஐஇ-யில் அசத்தலான 47 டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் லேப் அட்டென்டென்ட் வேலை

சென்னை: சென்னையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில் இங்கு காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் லேப் அட்டென்டென்ட் பணியிடங்கள் நிரப்ப்பபட உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council Of Medical Reserch or ICMR) செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலின் கீழ் நாட்டின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

சென்னை அய்யப்பாக்கம் தமிழ்நாடு ஹவுசிங் போர்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (National Institute of Epidemology or NIE) அமைந்துள்ளது.

இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nie.gov.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

சம்பளம்:

மாதம் ரூ.18 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

காலியிடங்கள்:

2 பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது.

அதன்படி டெக்னீக்கல் அசிஸ்டென்ட் (Technical Assistant)பணிக்கு 33 பேர்,

லேப் அட்டென்டென்ட் (Lab Attendant) பணிக்கு 14 பேர் என

மொத்தம் 47 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு இளங்கலையில் பட்டப்படிப்பையும்,

லேப் அட்டென்டென்ட் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

லேப் அட்டென்டென்ட் பணியை விரும்புவோர் 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மாதசம்பளம்:

டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும்.

கடைசிதேதி:

விண்ணப்பத்துக்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இவ்வாறும் விண்ணப்பம் செய்வோர்

  1. எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notification : Click Here

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *